Divi Editz

Latest, Trending, Viral, Top Most Watched, News, Entertinment, Videos, Reels, Pics, Images, Sports, Web Series, Movies.

karuppi song lyrics

SONG TITLEKARUPPI
MOVIEPARIYERUM PERUMAL
CASTKATHIR, ANANDHI
MUSICSANTHOSH NARAYANAN
SINGER (VOCALS)SANTHOSH NARAYANAN, DR. S. C. CHANDILYA
SONG WRITER MARI SELVARAJ, VIVEK
YEAR2018

கருப்பி என் கருப்பி பாடல் வரிகள்

அடி கருப்பி என்
கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ

அடி கருப்பி என்
கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ

கருப்பி என் கருப்பி
நான் பேசுறது கேக்குதா என்
அழுகையும் கேக்குதா அந்த
ரயிலின் அடியில் சிக்கி
செதறி இதயம் கத்தும்
வலியும் வேதனையும்
கேக்குதா

இப்ப உடனே நான்
உன்ன பாக்கணும் மூக்கில்
முகம் வச்சி ஒரசனும் உன்
நாக்கில் நக்கி என் அழுக்க
கழுவி போகணும் எங்க
வந்தா உன்ன பாக்கலாம்

யார் அந்த காட்டில்
ஒடஞ்சி கிடப்பது நீயா இல்ல
நானா நானா இல்ல நீயா நீயா
நானா நானா நீயா கருப்பி

இறந்தது நீயா இருப்பது
நானா இருப்பது நீயா இறந்தது
நானா நம்மள கொன்னவன்
யாருன்னு எனக்கு நல்ல
தெரியும் அங்க செத்தது
யாருன்னு அவனுக்கு
மட்டும் தான் புரியும்

அழிஞ்சது நீயா
ஓ ஓ ஓ
அழுவது நானா
ஓ ஓ ஓ

அழுவது நீயா
ஓ ஓ ஓ
அழிஞ்சது நானா

அடி கருப்பி
என் கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ (2)

எந்திரி கருப்பி
அம்மா கூப்புடுறா குளிக்க
போகணும் எந்திரிடி ஏன் டி
பேசல என் கூட என்னடி
நடந்திச்சி அங்க

வலிய தாங்காம
துடிச்சியா கடைசி நிமிஷம்
என்ன நெனைச்சியா உன்ன
கொல்லும் போது அவன்
சிரிச்சானா நீ கொரைக்கும்
போது அவன் மொறைச்சானா

அடி கருப்பி
என் கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ

உன் கிட்ட படிச்சி
படிச்சி சொன்னேனே
கேட்டியா யார் கூப்டு நீ
போன ஏன் டி போன
எத்தன தடவ சொல்லி
இருக்கேன் எல்லா மனுசனும்
இங்கே ஒன்னு இல்லன்னு

வளத்து அணைக்குறவன்
கழுத்த நெரிக்கிறவன் கண்ண
தடவுறவன் கால நொடிக்கிறவன்
கொன்னு சிரிக்கிறவன் நின்னு
அழுகுறவன்

கருப்பன் செவப்பன்
சாமி சாத்தான் அடிமை
ஆண்டான் மயிரு மட்ட

ஆயிரம் மனுஷன்
உண்டுன்னு உனக்கு
அப்போவே சொன்னேன்
கேட்டியா நீ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
இப்ப உடனே நான்
உன்ன பாக்கணும் கருப்பி
க ஓ ஓ ஓ

அடி கருப்பி
என் கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ (2)

அடி கருப்பி
என் கருப்பி நகதடமே
என் பாத

நாளைக்கு வந்து
அப்பா கேப்பாரு நான்
என்னடி பதில் சொல்லுவேன்
உன்ன எங்கன்னு சொல்லுவேன்
எங்கடி இருக்க நீ

நீ இல்லாத
காட்டில் நான் எப்படி
தான் திரிவேனோ

அடி கருப்பி
என் கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான்
திரிவேனோ

எந்திரி கருப்பி
எந்திரி கருப்பி எந்திரி
கருப்பி எந்திரி கருப்பி

அடி கருப்பி
என் கருப்பி நகதடமே என்
பாத நீ இல்லாத காட்டில்
நான் எப்படி தான் திரிவேனோ

ரெண்டு காலிலோ
நாலு காலிலோ இந்த
மண்ணிலே உலவிட்டு
கெடக்க நாய் இல்லடி நீ
நான் இல்லையா நீ

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *